தற்காப்புக்கு

கோவிட் -19 உடன் போராடுவதற்கான வழிகள்

நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க

கோவிட் -19 ஐ எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது ஒரு முக்கியமான வழியாகும் என்று பல மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

பின்வருவனவற்றில் சில அல்லது அனைத்தையும் முயற்சிக்கவும் - பயிற்சி செய்யவும் :

 1. வீட்டில் ஆரோக்கியமான புதிய சமைத்த உணவு மற்றும் பழங்களை உட்கொள்ளுங்கள்.
 2. வைட்டமின் சி, துத்தநாகம் (சிங்க்) வைட்டமின் கே மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
 3. நீலகிரியில் உள்ள பெரும்பாலான மருந்துக் கடைகளில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசரகுடிநீர் (ஆயர்வேதா) ஆர்சினிக் ஆல்பம் (ஹோமியோபதி) ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
 4. தவறாமல் நடை ஓட்ட அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
 5. போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
 6. யோகா மற்றும் மூச்சு பயிற்சி
 7. ஒரு நாளைக்கு 2 முறை பெத்தடின் திரவம் கொண்டு வாய் மற்றும் தொண்டை பகுதிகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
 8. அதிக நீர் மற்றும் பானங்களை அருந்துங்கள்
 9. புகையிலை மது மற்றும் சர்க்கரை உள்ள பானங்களை குறைக்கவும்.

கோவிட் பரவலை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்

prevention in Nilgiris

பரவுவதைத் தடுப்பதன் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்துவதே எங்கள் உத்தி. நாங்கள் அதை எப்படி செய்கிறோம் என்பது இங்கே:

 1. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இ.பாஸ் தேவையில்லை என்றாலும் பார்வையாளர்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ.பாஸ் இன்னும் தேவைப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் மூலமாக நோய் தொற்று பரவலை கண்காணிக்கவும், தொடர்புகளை அறியவும் இது உதவுகிறது.
 2. தொற்று பரவலை கண்டறிந்து எச்சரிக்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சோதித்து எச்சரிக்கையாக இருக்க முடியும்.
 3. நீலகிரி மாவட்டத்தல் தொடர்ந்து அனைவரும் எளிதில் அணுகக் கூடிய சோதனை மைய வசதிகளை மாவட்ட நிர்வாகம் அதிகரித்து வருகின்றது.
 4. தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள இடமில்லாத மக்களுக்கு இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
 5. நடமாடும் வேன்கள் பொது சதுக்கங்களில் உள்ள கியோஸ்க்குகள் மற்றும் இந்த வலைதளத்தில் மூலம் மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமங்களுக்கும் விழிப்புணர்வை அளிக்கிறது. இதனால் மக்கள் தங்களையும் மற்றவர்களையும் எவவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நேர்மறையாக இருந்தால் சரியான நெறிமுறைகளை பின்பற்றுவதையும் மக்கள் அறிவார்கள்.
prevention in Nilgiris

கவனிக்க வேண்டிய
அறிகுறிகள்

தொண்டை வலி

தலைவலி

காய்ச்சல்

சோர்வு

சுவாசிப்பதில் சிரமம்

மூக்கடைப்பு

தசை அல்லது உடல்வலி

குளிர்

precautions nilgiris

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாப்பது?

precautions nilgiris
 1. வீட்டிலேயே இருங்கள்.தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.
 2. பொது இடங்களில் எச்சில் துப்புவதால் COVID-19 பரவுகிறது. இது இப்போது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 3. Follow the Nilgiri guidelines and SOPs
 4. Avoid social gatherings both at home and outside especially weddings and funerals  
 5. மோசமான காற்றோட்டத்துடன் உள்ள மூடிய இடங்களை தவிர்க்கவும்.
 6. வெளியே வரும்போது மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 அடி தூரத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்.
 7. பொறுத்தமான முகமூடியை அணியுங்கள்
 8. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், குறிப்பாக நீங்கள் பயணம் அல்லது ஷாப்பிங்கிலிருந்து வீடு திரும்பிய பிறகு.
 9. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 10. அறிகுறிகளை கவனித்து பரிசோதனை செய்யுங்கள் அல்லது வீட்டிலோ அல்லது அக்கம்பக்கத்திலோ அறிகுறிகள் தோன்றினால் சுகாதார ஊழியரை தொடர்பு கொள்ளுங்கள்.
 11. கோவிட்-19 நோயால் கண்டறியப்பட்ட ஒருவருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததா? ஏன்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
 12. கோவிட்-19க்கு பாசிட்டிவ் என்று அறிவிக்கப்பட்ட உங்கள் அருகில் உள்ள ஒரு நபர் அல்லது பணியிடத்தைப் பற்றி குன்னூர் சுகாதார அதிகாரிகளால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் அதற்கு அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
 13. Boost immunity
 14. கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்

மற்றவர்களுக்கு உதவியாகவும் மரியாதையுடனும் இருங்கள்

உங்கள் முகமூடியை
எவ்வாறு
தேர்ந்தெடுப்பது

ஏற்கனவே உள்ள நோய்களின் முக்கியத்துவம் - கவனம் தேவை

கொரோனா தொற்று வரும் முன்னே உடலில் சில வியாதிகள் உள்ளவர்கள் உடல் ;நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கோ-மார்பிட்டி என்பது ஒரு நோயல்ல, நிலை. பெரும்பாலும் நாள்பட்டது. இது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முன்பே நோயாளியிடம் உள்ளது. இந்த நிலைமைகளில் பெரும்பாலானவை வழக்கமான மருந்துகளால் நிர்வகிக்க கூடியவை என்றாலும் கோவிட்-19 போன்ற மற்றொரு நோய் தொற்றின் வளர்ச்சி ஒரு நோயாளியை கடுமையான சிக்கல்களுக்கும், அதிக ஆபத்திலும் ஆழ்த்துகிறது.

கொமொர்பிடிட்டி சில பின்வருமாறு:

 • இரத்த அழுத்தம்
 • சர்க்கரை நோய்
 • இதய நோய்
 • புற்றுநோய்
 • நுரையீரல் கோளாறு
 • Transplanted organs or any immune suppressant diseases
 • மூச்சுக்குழல் அடைத்தல்
 • அரிவாள் செல் நோய்
 • உடல் பருமன்
 • எச்.ஐ.வி. தொற்று.
பின்தொடரவும்